உள்துறை இணை அமைச்சரான கிரண் ரிஜ்ஜு மாநிலங்களவையில் இத்தகவலை தெரிவித்துள்ளார். ஐ.நா குற்றப்பிரிவு எடுத்த சர்வேயின் படி 2010 ஆம் ஆண்டு அதிகபட்சமாக அமெரிக்காவில் 85,593 கற்பழிப்பு சம்பவங்களும், அதை தொடர்ந்து பிரேசிலில் 41,180 கற்பழிப்பு சம்பவங்களும் நடந்துள்ளன. 22,172 கற்பழிப்பு சம்பவங்களுடன் இந்தியா 3வது இடத்தை பிடித்துள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார்.
அதே சமயம் மக்கள் தொகை கணக்கீட்டின் படி பார்த்தால் அமெரிக்காவில் ஒரு லட்சம் பேரில் 27.3 பேர் கற்பழிக்கப்பட்டுள்ளதாகவும், பிரேசில் 21.09 பேர் கற்பழிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் 1.8 பேர் மட்டுமே கற்பழிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.அதே போல் கொலை சம்பவங்கள் தொடர்பான 2012 ஆம் ஆண்டு ஐ.நா. சர்வேயின் படி பிரேசில் 50108 பேருடன் முதலிடத்தையும், இந்தியா 43335 பேருடன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி