சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கத்தி படமும், ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் பூஜை படமும் இந்த தீபாவளிக்கு ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பூஜை படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடித்துவிட்டது. இன்னும் க்ளைமாக்ஸும், பாடல்களும் மட்டுமே படமாக்கப்பட வேண்டியிருக்கிறதாம்.
அதேபோல் கத்தி படத்தின் 90 சதவிகித காட்சிகள் முடிவடைந்தநிலையில் இன்னும் 20 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி உள்ளது.விஜய், விஷால் படங்கள் ஒரே நாளில் வெளிவருவது தொடர்பாக ஒரு ப்ளாஷ்பேக் உள்ளது. 2007 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் விஜய் நடித்த ‘போக்கிரி’ படம் வெளியானது. அதே நாளில் வெளிவந்தது விஷாலின் ‘தாமிரபரணி’ படம். ஏழு வருடங்களுக்குப் பிறகு தற்போது இளைய தளபதியும், புரட்சி தளபதியும் மீண்டும் மோதுகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி