இருப்பினும், வாகை சூடவா பாடலை அந்த படம் வெளியான நேரத்திலேயே கேட்டிருந்த கமல், தனது விஸ்வரூபம் 2 படத்திற்கு ஜிப்ரானை இசையமைப்பாளராக புக் பண்ணினார். அது மட்டுமின்றி, உத்தமவில்லன், த்ரிஷ்யம் தமிழ் ரீமேக் ஆகிய படங்களுக்கும் தொடர்ச்சியாக புக் பண்ணி மற்ற இயக்குனர்களை எல்லாம் ஜிப்ரானை திரும்பிப்பார்க்கும்படி செய்து விட்டார் கமல்.
விளைவு, ஒரே இசையமைப்பாளரை தொடர்நது 3 படங்களுக்கு கமல் புக் பண்ணியிருக்கிறார் என்றால் அவரிடம் ஏதோ விசேஷ திறமை உள்ளது என்று இப்போது மற்ற இயக்குனர்களும் அவரை நாடத் தொடங்கியிருக்கிறார்கள். இந்நிலையில், புத்தகம் படத்தையடுத்து அமரகாவியம் படத்தில் நடித்துள்ள ஆர்யாவின் தம்பி சத்யா நடிக்கவிருக்கும் சென்னை சிங்கப்பூர் என்ற படத்திற்கும் தற்போது ஜிப்ரான்தான் ஒப்பந்தமாகியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி