அவர் நடித்து வரும் பெருச்சாழி படத்தின் படப்பிடிப்புகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் நடந்து வருகிறது. அங்கு இந்திய உணவுகள் கிடைக்காமல் யூனிட் ஆட்கள் தவித்திருக்கிறார்கள். உடனே அதிரடியாக களத்தில் இறங்கிய மோகன்லால் தானே சமையற்காரராக மாறி யூனிட்டில் உள்ள அனைவருக்கும் இந்திய உணவு வகைகளை சமைத்து கொடுத்திருக்கிறார்.
மோகன்லால் சமைக்கும் நேரத்தில் அவர் சில ரெசிபிகளை சேர்க்கும் நேரத்தில் யாரையும் பக்கத்தில் விடாமல் ரகசியமாக செய்தார். முட்டையில் மட்டும் விதவிதமான உணவுகளை செய்தார். அவருக்குள் ஒரு தேர்ந்த சமையற்காரர் இருப்பதை நாங்கள் கண்டோம் என்கிறார் படத்தின் தயாரிப்பாளர் விஜய் பாபு.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி