சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, துபாய், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இந்த படம் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஒடிக்கொண்டு இருக்கிறது.சென்னையில் முதல் வார வசூல் ரூ.1 கோடியை தாண்டியது. சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் இரண்டு வாரத்தில் ரூ.2½ கோடி வசூலானது. பெரிய ஹீரோக்களுக்கு இணையாக வசூல் சாதனை படைத்துள்ளது. இதுவரை ரூ.12 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தெலுங்கு, இந்தி மொழிகளில் இப்படத்தை ரீமேக் செய்ய கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில் கலைப்புலி தாணுவே இவ்விரு மொழிகளிலும் ‘அரிமா நம்பி’ படத்தை ரீமேக் செய்கிறார். இதில் நடிக்க பெரிய ஹீரோக்களுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி