செய்திகள் தென்கொரியாவின் புசான் நகரில் காந்தி சிலை திறப்பு!…

தென்கொரியாவின் புசான் நகரில் காந்தி சிலை திறப்பு!…

தென்கொரியாவின் புசான் நகரில் காந்தி சிலை திறப்பு!… post thumbnail image
சியோல்:-அகிம்சையை போதித்த மகாத்மா காந்தியை போற்றும் வகையில் தென்கொரியாவின் புசான் மாநகரத்தில் முதல் மார்பளவு சிலை திறக்கப்பட்டுள்ளது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநகர மேயர் பியாங்-சூ சஹ் இந்த வெண்கலச் சிலையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

சிலை திறப்பு விழாவில் இந்திய தூதர் விஷ்ணு பிரகாண், கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் தலைமை இயக்குனர் சதீஷ் மேத்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.விழாவில் பேசிய மேயர் சஹ், இந்தியாவுக்கும் கொரியாவுக்கும் இடையே நீண்டகால ஆழமான உறவு உள்ளது என்று குறிப்பிட்டார். மகாத்மா காந்தியின் போதனைகளான அமைதி மற்றும் சகோதரத்துவம் கொரிய மக்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் என்றும் அவர் கூறினார்.கொரியாவுடனான நட்புக்கு அடையாளமாகவும், கொரிய மக்கள் மீதான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் இந்த ஆண்டு துவக்கத்தில் இந்தியா புனித போதி மரக்கன்றை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி