நியூலாந்தில் ஒரே இடத்தில் வேலை பார்க்கும் நண்பர்கள் சிலர் சுற்றுலா போகிறார்கள். போன இடத்தில் அதில் ஓருவர் கொல்லப்படுகிறார். அவரை கொன்றது யார் என்பதில் அவர்களுக்குள் சண்டை வருகிறது. பிரிவு வருகிறது. பகை வருகிறது. இறுதியில் என்ன என்பது கிளைமாக்ஸ். முழு படத்தையும் நியூசிலாந்தில் எடுத்திருக்கிறார்கள்.இந்தப் படத்துக்கு மலையாள இசை அமைப்பாளர் சித்தாராவின் மகன் விஷ்ணு மோகன் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. பிரசாத் லேப்பில் இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்திருந்தார்கள்.
ஆனால் படத்தில் நடித்த ஹீரோ விநய்யோ, ஹீரோயின்களோ வரவில்லை. அவ்வளவு ஏன் தயாரிப்பாளர் செலவில் நியூசிலாந்தை சுற்றிப்பார்த்து வந்த தம்பி ராமையா, தலைவாசல் விஜய்கூட வரவில்லை.மதயானைக்கூட்டம் இயக்குனர் விக்ரம் குமார், எட்டுதிக்கும் மதயானை கூட்டம் இயக்குனர் தங்கசாமி, தயாரிப்பாளர் சீனிவாசன் உள்ளிட்ட ஒரு சில பிரமுகர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர். இதற்காக நியூலாந்திலிருந்து குடும்பத்துடன் வந்திருந்த தயாரிப்பாளர் பாவம் கடைசி வரை கவலையுடனேயே இருந்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி