அதனால், தனது நடிப்பில் இரண்டு வருடங்களுக்குப்பிறகு வெளியாகும் வாலு படத்தைதான் தற்போது பெரிதாக நம்பிக்கொண்டிருக்கிறார் சிம்பு. அதோடு. இந்த படம் தனக்கு இன்னொரு விண்ணைத்தாண்டி வருவாயா படமாக இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறார் அவர்.அதனால், அப்படத்தில் தான் பயன்படுத்திய சில டயலாக்குகளையும் இந்த படத்தில் சில இடங்களில் பிரயோசித்துள்ளாராம் சிம்பு. குறிப்பாக, ஒரு காட்சியில், நாம நண்பர்களாகவே இருந்திடலாமா? என்று காதலை முறித்துக்கொள்வதற்காக சிம்புவிடம் கூறுவார் த்ரிஷா. அப்போது சிம்பு செம டென்சனை காட்டுவார். அதையடுத்து, சிம்புவைப்பார்த்து திரிஷா, ஐ ஹேட் யூ என்ற வசனத்தை பேசிவிட்டு நகருவார். அதற்கு சிம்பு தேங்க்யூ என்பார்.
அதேபோல், இப்போது வாலு படத்தில் ஒரு காரசாரமான காதல் மோதல் காட்சி உள்ளதாம். அந்த காட்சியிலும் சிம்புவைப்பார்த்து ஹன்சிகா, ஐ ஹேட் யூ என்பாராம். அதற்கு சிம்பு தேங்க்யூ என்று பதில் கொடுப்பாராம். இதேபோல் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை நினைவுபடுத்தும் வகையில் வாலு படத்தில் ஆங்காங்கே காட்சிகளும், வசனங்களும் எட்டிப்பார்க்கிறதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி