கேரளா:-மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்த மங்கிலீஸ் படமும், அவரது மகன் துல்கர் சல்மான் நடித்த விக்ரமாதித்தியன் படமும் ரம்ஜான் பண்டிகையன்று ஒரே நாளில் வெளியாகி மோதுகின்றன.இந்த ஆண்டு தந்தையும் மகனும் மோதும் படத்தை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் மலையாள ரசிகர்கள்.
மங்கிலீஸ் படத்தில் மம்முட்டியுடன் பகத் பாசில், ஸ்ரீந்தா நடித்துள்ளனர். சலாம் பாபு இயக்கி உள்ளார். விக்ரமாதித்தியன் படத்தில் துல்கருடன் உன்னி முகுந்தனும், நமீதா பரமோத்தும் நடித்துள்ளனர். லால் ஜோஸ் இயக்கி, தயாரித்துள்ளார்.தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் துல்கரும், சமீபகாலமாக தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வரும் மம்முட்டியும் ரம்ஜானில் மோதுவதை ஆர்வத்துடன் கவனித்து வருகிறது மலையாள சினிமா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி