அதனால் இனிமேல் தனுஷின் மொத்த கவனமும் இந்திக்கு திரும்பி விடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரோ, இன்னும் 10 வருடத்திற்கு பிறகுதான் இந்தியில் முழுசாக இறங்குவேன். அதுவரைக்கும் தமிழில் எனக்குரிய இடத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வேன் என்று ஒரே நேரத்தில் வேலையில்லா பட்டதாரி, அனேகன், வெற்றிமாறன் இயக்கும் படம் என பல படங்களில் கமிட்டானார்.அப்படி அவர் நடித்த படங்களில் வேலையில்லா பட்டதாரி தற்போது திரைக்கு வந்திருக்கிறது முதல் நாள் கலெக்சன் திருப்திகரமாக உள்ளதாம்.
பல தியேடடர்களில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறதாம். இதனால் மயக்கம் என்ன, 3, மரியான் என தான் நடித்த படங்களின் வெளியானபோது தியேட்டர்களில் காத்து வாங்கியதால் கலங்கிப்போய் நின்ற தனுஷ், இப்போது உற்சாகமடைந்திருக்கிறார்.இதனால் இந்த படத்தை எப்படியாவது 100 நாள் படமாக்கி விட வேண்டும் என்று நினைக்கும் அவர், டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதில் கொடுத்து வருபவர், நீங்கள் கொடுத்த இந்த வெற்றி என்னை ரீ-சார்ஜ் பண்ணியுள்ளது. சந்தோசத்தில் கண்கள் கண்ணீர் வடிக்கிறது. அதனால் எனது கண்ணீரை உங்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன் என்று ஆத்மார்த்தமாக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் தனுஷ்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி