இந்நிலையில், வெற்றி, தோல்வி இரண்டையுமே சந்தித்து வரும் விமலை, சமீபத்தில் வெளியான மஞ்சப்பை படத்தின் வெற்றி மீண்டும் தலைநிமிர வைத்துள்ளது. இதையடுத்து, சில படங்களின் தோல்வி காரணமாக அவரை மூன்றாம்தட்டு ஹீரோ ரேஞ்சுக்கு பின்தள்ளிய இயக்குனர்களே இப்போது விமலிடம் கால்சீட் கேட்டு துரத்துகிறார்கள்.
மஞ்சப்பை படம் பிரிக்ஸ் திரைப்பட விருது விழாவில் திரையிடப்படுகிறதாம். ஏற்கனவே, வாகை சூடவா படம் தேசிய விருது பெற்றதால் சந்தோசமடைந்த விமல், இந்த படம் அடுத்தடுத்து பல உலகப்பட விழாக்களில் கலந்து கொள்ளவிருப்பதால் இன்னும் சந்தோசத்தில் இருக்கிறார். மாரக்கெட்டில் பெரிய நடிகர் இல்லை என்றாலும், நான் நடித்த படம் உலகப்பட விழாக்களில் திரையிடப்படுவதே எனக்கு பெரிய சந்தோசம்தான் என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் விமல்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி