சென்னை:-‘வீரம்’ படத்தை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் அஜித்.இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் அனுஷ்கா, திரிஷா என இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள். இவர்களுடன் அருண்விஜய்யும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.
இப்படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அதில் ஒரு கதாபாத்திரத்தில் அஜித், பெண் குழந்தைக்கு தந்தையாக நடிக்கிறாராம். ஏற்கெனவே ‘வரலாறு’, ‘அசல்’ ஆகிய படங்களில் அஜித் தந்தையாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது அஜித், த்ரிஷா சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறாராம் கௌதம் மேனன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி