சென்னை:-சமீபத்தில் வெளியான அரிமா நம்பி படத்தில் சரக்கு அடிப்பதுபோல் அவர் நடித்திருப்பதால் முதன்முறையாக சர்ச்சையில் சக்கியிருக்கிறார் நடிகை பிரியாஆனந்த். அதோடு, அப்படத்தின் டைரக்டர், ஆணுக்கு பெண் சரிசமம் என்பதை உணர்த்தவே அப்படி செய்தேன் என்று சொன்ன பதில்தான் இந்த விசயத்தை பூதாகரமாக்கி விட்டது.
விளைவு, இப்போது ஆளாலுக்கு ப்ரியாஆனந்த் எங்கு சென்றாலும் அதைப்பற்றியே கேட்டு வெறுப்பேற்றுகிறார்களாம். முக்கியமாக வெளியூர்களுக்கு செல்லும் இடங்களில் அவரை சந்திக்கும் மீடியாக்கள், எடுத்த எடுப்பிலேயே அந்த சரக்கு காட்சியில் நடித்தது பற்றித்தான் கேட்கிறார்களாம். அதனால் இதுவரை மீடியாக்களிடம் விழுந்து விழுந்து பேட்டி கொடுத்து வந்த ப்ரியாஆனந்த், இப்போது யாராவது மீடியாவினரை கண்டாலே தெறித்து ஓடிக்கொண்டிருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி