செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் சி.டி.க்களை டவுண்லோடு செய்யாமல் வாங்க வேண்டும்: இளையராஜாவின் பேச்சு…!

சி.டி.க்களை டவுண்லோடு செய்யாமல் வாங்க வேண்டும்: இளையராஜாவின் பேச்சு…!

சி.டி.க்களை டவுண்லோடு செய்யாமல் வாங்க வேண்டும்: இளையராஜாவின் பேச்சு…! post thumbnail image
தேனி மாவட்டம் லோயர்கேம்பில் இசையமைப்பாளர் இளையராஜா ரசிகர்கள் பங்கேற்ற பேன்ஸ்கிளப் கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா பேசியதாவது:- சென்னையில் வசித்தாலும் தேனி மாவட்டத்திற்கு வரும்போது எனக்கு ஒருவித புத்துணர்ச்சி ஏற்படுகிறது. நான் பிறந்து, வளர்ந்த ஊர் என்பதற்காக சொல்லவில்லை. இயற்கையோடு அமைந்த இந்த ஊர் மனதிற்கு மிகவும் அமைதியை தருகிறது. இப்பகுதியில் தான் எனது தாயார் மற்றும் மனைவியின் நினைவிடங்கள் உள்ளன.

ஆண்டு தோறும் தீபாவளி சமயத்தில் இங்கு வந்து எனது தாயாரின் சமாதியில் அஞ்சலி செலுத்துவேன். தற்போது அதற்கு முன்னதாகவே வந்துள்ளேன். இங்கு கூடிய ரசிகர்களின் நோக்கம் இசையை வளர்ப்பது, ஆன்மீகத்தை காப்பது, சமூகசேவைகளை மக்களுக்கு செய்வது போன்றவைதான். சி.டி வாங்குங்கள் தன்னம்பிக்கையை ஊட்டக் கூடியது இசை மட்டுமே. எனது பாட்டை கேட்டால் மனதிற்கு நிம்மதி தருகிறது என்று கூறுகின்றனர்.

கடவுள் என்னை இசைக்குள்ளேயே இருக்க வைத்துள்ளார். மனம் சுத்தமாக இருந்தால் சாக்கடையில் கூட நடக்கலாம். என்னிடம் பலர் புதுஆல்பம் போடுமாறு கூறி வருகின்றனர். பணம் கொடுத்து யாரும் சி.டி வாங்காததால்தான் நான் போடவில்லை. எனது ரசிகர்கள் இணையதளத்தில் பாடல்களை டவுண்லோடு செய்யாமல் சி.டிக்களை கடையில் வாங்கவேண்டும். தற்போது பேன்ஸ்கிளப்பில் 20 லட்சம் ரசிகர்கள் உள்ளனர். 2 லட்சம் பேர் சி.டி புக் செய்தால் கண்டிப்பாக நான் ஆண்டுக்கொரு புதிய இசை ஆல்பம் தயாரிப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் நடிகர் ராஜேஷ், டைரக்டர்கள் ரத்தினகுமார், சுகா உள்பட பலர் பேசினர். கோவை, சேலம், திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி