தமிழில் ‘நேரம்’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நஸ்ரியா. ‘ராஜா ராணி’, ‘நய்யாண்டி’ படங்களிலும் நடித்துள்ளார். நஸ்ரியாவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. மலையாள நடிகர் பகத் பாசிலை மணக்கிறார். கடைசியாக ‘திருமணம் எனும் நிக்காஹ்’ படத்தில் ஜெய் ஜோடியாக நடித்தார். இப்படம் விரைவில் ரிலீசாகிறது.
இவர்கள் திருமணம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 21–ந்தேதி திருவனந்தபுரத்தில் நடக்கிறது. திருமண வரவேற்பு ஆலப்புழையில் 24–ந்தேதி நடக்கிறது. திருமண அழைப்பிதழ் தயாராகியுள்ளது. நடிகர், நடிகைகள் மற்றும் உறவினர்களுக்கு இருவரும் திருமண அழைப்பிதழ் கொடுத்து வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி