உள்ளூரில் அவர் வாகை சூடுவது இதுவே முதல் முறையாகும். கடைசியாக இங்கு ஜெர்மனி வீரர் என்று பார்த்தால் சூமாக்கர் 2006-ம் ஆண்டில் வெற்றி பெற்றிருந்தார். ராஸ்பர்க்கை விட 20.789 வினாடி பின்தங்கிய பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (வில்லியம்ஸ் அணி) 2-வது இடத்தை பிடித்து 18 புள்ளிகளை தட்டிச் சென்றார்.இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 3-வது இடத்தை பிடித்தார். ஹாமில்டன் தகுதி சுற்றில் விபத்துக்குள்ளாகி பாதியில் வெளியேறியது மட்டுமின்றி, திடீரென கியர்பாக்சை மாற்றியதால் மேலும் 5 இடங்கள் தரம் இறக்கப்பட்டு, பிரதான பந்தயத்தில் 20-வது வரிசையில் இருந்து தான் தனது காரை கிளப்பினார்.ஆனாலும் அவர் முதல் 3 இடங்களுக்குள் நுழைந்தது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.
இந்த சீசனில் தொடர்ந்து தடுமாறி வரும் நடப்பு சாம்பியன் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் 4-வதாக வந்தார். இந்தியாவுக்கு சொந்தமான போர்ஸ் இந்தியா அணி வீரர்கள் நிகோ ஹல்கென்பர்க் (ஜெர்மனி) 7-வது இடத்தையும், செர்ஜியோ பெரேஸ் (மெக்சிகோ) 10-வது இடத்தையும் பெற்றனர்.முன்னதாக வில்லியம்ஸ் அணி வீரர் பிரேசிலின் பெலிப் மாசாவின் கார், முதல் வளைவில் மற்றொரு வீரர் கெவின் மாக்னுசெனின் (டென்மார்க்) காருடன் பயங்கரமாக மோதி கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக மாசா காயமின்றி தப்பினார். அத்துடன் மாசா விலக நேரிட்டது.ஆனால் மாக்னுசென் தொடர்ந்து போட்டியில் பங்கேற்று 9-வது இடத்தை வசப்படுத்தினார்.
முதலிடம் பிடித்தது குறித்து ராஸ்பர்க் கூறுகையில், இது அற்புதமான வெற்றி. சொந்த மண்ணில் முதல் முறையாக வெற்றி பெற்றது, நம்ப முடியாத உணர்வை தருகிறது.
இது எனக்கு மிகவும் சிறப்புக்குரிய நாள் என்றார். 10 சுற்றுகள் முடிவில் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான போட்டியில் நிகோ ராஸ்பர்க் 190 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ஹாமில்டன் 176 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், டேனியல் ரிச்சியர்டோ (ஆஸ்திரேலியா) 106 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். 11-வது சுற்று போட்டி ஹங்கேரியில் வருகிற 27ம் தேதி நடக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி