இதற்கிடையே வாரப்பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய்யே அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறப்பட்டதால், இணையதளங்களில் விஜய்-அஜீத் ரசிகர்கள் காச் மூச் என்று கத்திக்கொண்டிருக்கின்றனர். இது ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும், ஆகஸ்ட் 15ம் தேதி மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டம் சூட்டப்பட இருப்பதாக கடந்த சில தினங்களாக அனல் பறக்கும் புதிய செய்தி பரவிக்கிடக்கிறது.இந்த சூழ்நிலையில், விஜய், அஜீத் இருவருடனும் நடித்த திரிஷாவிடம் சிலர் தொடர்பு கொண்டு, இந்த இருவரில் யாருக்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தை கொடுக்கலாம் என்று கேட்டார்களாம்.
அதற்கு, என்னைக்கேட்டால், இந்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை விஜய், அஜீத் மட்டுமின்றி சூர்யா, விக்ரமுக்கும் கூட கொடுக்க வேண்டும். காரணம், என்னைப்பொறுத்தவரை இவர்கள் நான்கு பேருமே சூப்பர் ஸ்டார் நடிகர்கள்தான் என்று போட்டுத்தாக்கியிருக்கிறார்.இதனால் ஏற்கனவே இருக்கிற பிரச்சினை போதாது என்று இப்போது இன்னும் இரண்டு நடிகர்களையும இந்த வம்பில் இழுத்து விடுகிறாரோ த்ரிஷா என்று அவரிடம் கருத்து கேட்டவர்கள், காதுகளைப் பொறுத்திக்கொண்டு ஓட்டம் பிடித்து விட்டார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி