சென்னை:-2003 ஆம் ஆண்டு லேசா லேசா என்ற படத்தில் ஷாமுக்கு ஜோடியாக நடிக்க வைத்து திரிஷாவை அறிமுகப்படுத்தினார் பிரியதர்ஷன். அதன் பிறகு முன்னணி நடிகையான திரிஷா, தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் நம்பர் ஒன் நடிகையாக உயர்ந்தார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை படு பிஸியாக இருந்த திரிஷாவுக்கு சமீபகாலமாக சொல்லிக்கொள்ளும்படி படங்கள் இல்லை. இடையில் தெலுங்கு நடிகர் உடனான காதல் கிசுகிசு வேறு. இந்நிலையில், திரிஷா தன்னுடைய நிறைவேறாத ஆசையை வெளியிட்டிருக்கிறார்.அது என்னவென்றால், ஒரு படத்திலாவது ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வேண்டுமாம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்த ஆசையை வெளிப்படுத்தி வருகிறார் திரிஷா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி