சென்னை:-நடிகை சமந்தாவுக்கு, மலையாள நடிகை மீரா ஜாஸ்மினின் நடிப்பு ரொம்பவே பிடிக்குமாம். அவர், ‘அஞ்சான்‘ படத்தில் நடிப்பதற்கு காரணம் மீரா ஜாஸ்மின் தானாம். இதுபற்றி அவர் கூறும்போது, தற்போது முன்னணியில் உள்ள பல நடிகைகளின் நடிப்புக்கு நான் ரசிகை. ஆனாலும், மீரா ஜாஸ்மினின் நடிப்பு ரொம்ப பிடிக்கும். அவர், மலையாளத்தில் நடித்த சில படங்களை பார்த்து, அதேபோன்ற நடிப்பை சில படங்களில் பிரதிபலித்தும் உள்ளேன் என்கிறார்.
மேலும், ‘அஞ்சான்’ படத்தில் நடிக்க என்னை தொடர்பு கொண்டபோது, ஆக்ஷன் படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்காதே என்று தயங்கினேன். அப்போது, சண்டைக்கோழியில் மீரா ஜாஸ்மின் நடித்தது போன்ற கேரக்டர் என்று, டைரக்டர் சொன்னதால் சம்மதித்தேன் என்றார். மீரா ஜாஸ்மின் விட்ட இடத்தை கைப்பற்றுவதற்கும் முயற்சி செய்கிறாராம் சமந்தா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி