மேரிகோமின் தோற்றத்துக்கும், பிரியங்காவின் தோற்றத்துக்கும் சம்பந்தமே இல்லை. மேரிகோம் உடல் இரும்பு மாதிரி உருண்டு திரண்டு சிக்ஸ் பேக்குடன் இருக்கும். பிரியங்காவின் உடம்பு மென்மையானது என்ற விமர்சனங்கள் வந்தது.அத்தனையும் உடைத்து எரிந்து விட்டார் பிரியங்கா. மூன்று மாதங்கள் மேரிகோமோடு தங்கியிருந்து அவரிடம் குத்துச் சண்டையின் அடிப்படை விதிகளையும், அவரது மேனரிசங்களையும் கற்றுக் கொண்டார்.
கடுமையான உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக் கொண்டு வந்தார். இப்போது நடித்தும் முடித்து விட்டார் படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி ரிலீசாகிறது. கமர்ஷியல் படங்களில் கான் நடிகர்களுடன் நடித்து வந்த பிரியங்காவுக்கு ஏற்கனவே பேஷன் என்ற படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இப்போது மேரிகோம் மூலம் அதனை மீண்டும் ஒரு முறை எட்டிவிடுவார் என்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி