அவரை காரில் இருந்து இறங்க சொல்லிய போலீஸ் அதிகாரி டஸ்சின் பிட்ஸ் அவருடைய டீசர்ட்டை தூக்கி பிராவை குலுக்கு காண்பிக்க சொல்லி வற்புறுத்தினார். பிராவுக்குள் போதை மருந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தான் அவ்வாறு செய்யச்சொல்வதாக போலீஸார் வற்புறுத்தியதால் வேறு வழியின்றி அந்த பெண்ணும் பிராவை குலுக்கி காண்பித்தார். மேலும் அவரது காரையும் போலீஸ் அதிகாரி சோதனை செய்தார்.
இந்த சம்பவம் அந்த வழியாக சென்ற மற்றொரு நபரால் வீடியோ எடுக்கப்பட்டு இணையத்தில் பதிவு செய்யப்பட்டது. தனக்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில் போலீஸார் நடுரோட்டில் அநாகரீகமான முறையில் தன்னை சோதனை செய்ததாக ,லாக்லேண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, பொது இடத்தில் ஒரு பெண்ணை அநாகரீமான முறையில் சோதனை செய்தது போலீஸாரின் குற்றம் என்று தீர்ப்பளித்து அந்த பெண்ணுக்கு 25 ஆயிரம் அமெரிக்க டாலர் (15.25 லட்சம்) நஷ்ட ஈடு வழங்கும்படி அதிரடியாக தீர்ப்பளித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி