செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் பாகிஸ்தானில் உள்ள திலீப்குமாரின் வீடு பாரம்பரிய சின்னமாக அறிவிப்பு!…

பாகிஸ்தானில் உள்ள திலீப்குமாரின் வீடு பாரம்பரிய சின்னமாக அறிவிப்பு!…

பாகிஸ்தானில் உள்ள திலீப்குமாரின் வீடு பாரம்பரிய சின்னமாக அறிவிப்பு!… post thumbnail image
மும்பை:-நடிகர் திலீப்குமார் மற்றும் அவரது முன்னோர்கள் வாழ்ந்த வீடு, பெஷாவர் நகரில் புகழ்பெற்ற கிசா கவானி பஜார் பகுதியில் உள்ளது. 130 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த வீடு தற்போது பாழடைந்த நிலையில் உள்ளது. திலீப்குமார் இங்குதான் பிறந்தார். 1930-களில் அவரது குடும்பம் மும்பைக்கு இடம்பெயர்ந்தது.

திலீப்குமாரின் உறவினர் என்று கூறும் சிலர் அந்த வீட்டை தற்போது ஆக்கிரமித்துள்ளனர். ஆனால் அவர்கள் திலீப்குமாருக்கு உறவினர் அல்ல என்பது தெரியவந்துள்ளது. எனவே அந்த வீடு விரைவில் கையகப் படுத்தப்படும் என்று பி.என்.சி.ஏ. இயக்குர் (பொறுப்பு) மசூத் மிர்ஸா கூறினார்.
பாழடைந்த நிலையில் உள்ள அந்த வீட்டை கையகப்படுத்தி புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு பாகிஸ்தான் கலைப் பொருள்கள் தேசிய கவுன்சில் (பி.என்.சி.ஏ) இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. புனரமைப்பு பணிகளுக்குப் பிறகு அந்த வீட்டை அருங்காட்சியமாக அரசு மாற்ற உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி