சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு, கேரளாவில் தனது சகோதரியுடன் இணைந்து நடன நிகழ்ச்சிகள் நடத்தி வந்தவர்தான் இனியா. அதனால் அவருக்கு இந்த பாடலில் நடனமாடுவது ஒன்றும் இமேஜை பாதிக்கக்கூடிய விசயமாக தெரியவில்லையாம். அதனால் தொடர்ந்து கதாநாயகி அல்லாத வேடங்கள், அயிட்டம் பாடலுக்கு ஆடுவது என்றாலும் நான் ஓகே என்று தொடை தட்டுகிறார் இனியா.அவரிடத்தில் நீங்கள் ஜோடி சேர்ந்த விமல் நடிக்கும் படத்திலேயே குத்தாட்டமாடுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டால், விமலுடன் வாகை சூடவா படத்தில் நடித்தபோது எங்களுக்கிடையே நல்லதொரு புரிதல் இருந்தது.
அவர் என்னை விட சீனியர் நடிகர் என்பதால் சில டிப்ஸ்களை பெற்றும் நடித்தேன். தொடர்ந்து அவருடன் நடிக்க வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், சில படங்களின் தோல்வி எனது மார்க்கெட்டை சரித்து விட்டது. இருப்பினும், சினிமாவில் இதுபோன்ற மேடு பள்ளங்கள் வருவது இயல்பு. அதனால் இந்த படத்தில் விமலுடன் குத்தாட்டமாடினாலும், எதிர்காலத்தில் மீண்டும் அவருடன் டூயட் பாடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்கிறார் இனியா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி