சென்னை:-வாய் மூடிபேசுவோம், வடகறி படங்களை தயாரித்த ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படத்தை சித்தார்த் நடித்த உதயம் என்.எச் 4 படத்தை இயக்கிய மணிமாறன் இயக்குகிறார். இதில் ஜெய் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினா திரிஷா நடிக்கிறார். இது தொடர்பாக த்ரிஷாவுடன் பேசி வருகிறார்கள்.
மற்ற நடிகர்கள், டெக்னீஷயன்கள் இன்னும் முடிவு செய்யப்பட வில்லை. ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்புகள் தொடங்குகிறது. உதயம் போன்று பக்கா ஆக்ஷன் கதையாம். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
வடகறியின் கமர்ஷியல் ஹிட்டைத் தொடர்ந்து ஜெய்யுடன் இரண்டாவது முறையும் இணைவதில் பெருமைப்படுகிறோம். மணிமாறன், ஜெய், வேல்ராஜ் கூட்டணி மக்கள் விரும்பும் ஒரு சிறப்பான ட்ரீட்மெண்டை கொடுப்பார்கள் என்று நம்புகிறோம். ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து முழு வீச்சுடன் படப்பிடிப்பு தொடங்குகிறது என்கிறார் தயாரிப்பாளர் வருண் மணியன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி