இந்தப் பயணம் குறித்த இறுதி முடிவானது தற்போது விண்ணில் செலுத்தப்பட்டுள்ள மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் விண்கலம் வரும் செப்டம்பர் மாதம் செவ்வாய்க் கிரகத்தின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக இணைவதை அடுத்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.இஸ்ரோவின் இயக்கத்திறனை வெளிப்படுத்துவதற்காக இந்த முதல் பயணம் செயல்படுத்தப்பட்டது என்று ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார். இதனைத்தொடர்ந்து வரும் அடுத்த பயணம் அறிவியல் நடவடிக்கையைக் கொண்டிருக்கும் என்று அவர் கூறினார்.
முதல் திட்டத்தில் விண்கலத்தின் பயணம் கிட்டத்தட்ட 79 சதவிகிதம் நிறைவு செய்யப்பட்டுள்ளது என்ற இஸ்ரோ தலைவர் பயணம் ஆரம்பித்து 300 நாட்கள் கழிந்துள்ள நிலையில் செவ்வாயின் சுற்றுப்பாதையில் விண்கலம் இணைவது முக்கிய நிகழ்வாக இருக்கும் என்று தெரிவித்தார்.
இதற்கான திரவ உச்சநிலை மோட்டார் மறுபடியும் செயல்படத் தொடங்குவது என்பது சவால் நிறைந்தது என்றும் ராதாகிருஷ்ணன் கூறினார். முதல் முயற்சியிலேயே நாம் வெற்றியடைந்தால் இந்த சாதனையை நடத்திய முதல் ஆசிய மற்றும் உலக நாடாக இந்தியா அறியப்படும் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி