சென்னை:-கெளதம்மேனன் இயக்கத்தில் சரத்குமார் நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. அப்போதில் இருந்தே பின்னணியும் பாடத் தொடங்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் விஜய்யுடன் இணைந்து அவர் பாடிய கூகுள் கூகுள் என்ற பாடல் சூப்பர் ஹிட்டானதால் விஜய் ரசிகர்கள் பெரும்பாலானோர் ஆண்ட்ரியாவின் ரசிகர்களாகி விட்டனர்.அந்த ஒரே பாட்டில் ஏராளமான ரசிகர்களை சம்பாதித்துக்கொண்டார் ஆண்ட்ரியா.
அதையடுத்து விஜய் போன்று எந்த ஹீரோக்கள் பாடினாலும் அவர்களுடன் இணைந்து பாடி தனது பின்னணி பாடகி ரேட்டிங்கையும் உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்த ஆண்ட்ரியா, இப்போது அஞ்சான் படத்தில் சூர்யாவுடன் இணைந்தும் ஒரு பாடல் பாடியுள்ளார். இந்த பாடலும் சூர்யா ரசிகர்களால் ஹிட்டாக்கப்பட்டு விடும் என்பதோடு, தனது பெயரும் அவர்களால் இன்னும் பிரபலமாகி விடும் என்று உற்சாகத்தில் இருக்கிறார் ஆண்ட்ரியா.இதையடுத்து, ஸ்டார் ஹீரோக்கள் பாடும் பாடல்களின் தானும் இடம்பிடித்து ஸ்டார் பாடகியாகி விட வேண்டும் என்று ஆர்வம் காட்டி வருகிறார் ஆண்ட்ரியா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி