செய்திகள்,திரையுலகம் தமிழுக்கு வரும் ஹிருத்திக் ரோஷன், கத்ரீனா கைப்!…

தமிழுக்கு வரும் ஹிருத்திக் ரோஷன், கத்ரீனா கைப்!…

தமிழுக்கு வரும் ஹிருத்திக் ரோஷன், கத்ரீனா கைப்!… post thumbnail image
சென்னை:-டாம் க்ரூஸ், கேமரூன் டயஸ் நடித்த ஹாலிவுட் படமான ‘நைட் அன்ட் டே’ படத்தின் அதிகாரப்பூர்வ இந்தி ரீ-மேக் படமான ‘பேங் பேங்’ படத்தில் ஹிருத்திக் ரோஷன், கத்ரீனா கைப் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்கள். இப்படத்தின் கடைசிக் கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் பராகுவே நாட்டில் நடைபெற்றது. சித்தார்த் ஆனந்த் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.

விஷால் – சேகர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்கள். அபுதாபியில் படமாக்கப்படும் முதல் இந்தித் திரைப்படம் இது. அங்கு படத்தின் பல முக்கிய காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல இந்தித் திரையுலக வரலாற்றிலேயே மிகவும் பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சி ஒன்றையும் அங்கு படமாக்கியிருக்கிறார்கள்.தாய்லாந்து, கிரீஸ், சிம்லா, டில்லி ஆகிய இடங்களில் இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளது. ‘எந்திரன்’ படத்தில் வில்லனாக நடித்த டேனி டென்சோங்பா இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

மிக அதிகமான பொருட்செலவில் பிரம்மாண்டமாயத் தயாராகி வரும் இந்தப் படத்தில் ஹிருத்திக் ரோஷன் வழக்கம் போலவே அசத்தலான ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போடாமல் நடித்திருக்கிறாராம். படத்தின் முதல் பார்வை வழக்கம் போல் ஹிந்தித் திரையுலகில் ஆச்சரிய அலைகளை உருவாக்கியுள்ளது.’ஜிந்தகி நா மிலேகி டோபரா’ படத்திற்குப் பிறகு ஹிருத்திக், கத்ரீனா ஜோடியின் காதல் நெருக்கத்தைக் கண்டு மிரண்ட ரசிகர்கள் இந்தப் படத்திலும் அவர்களின் காதல் காட்சிகளைக் கண்டு பொறாமைப்படுவார்களாம். இந்தப் படத்தை இந்தியில் மட்டுமல்லாது, ‘தமிழ், தெலுங்கு’ மொழிகளிலும் ‘டப்’ செய்து வெளியிட முடிவு செய்துள்ளார்கள். அக்டோபர் 2ம் தேதி இப்படம் வெளியாகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி