படத்தின் படப்பிடிப்பு டில்லியில் நடைபெற்ற போது லட்சக்கணக்கான மக்கள் வீதியில் திரண்டு விட்டார்களாம். டில்லியின் சாந்தினி சௌக், பழைய கோட்டை ஆகிய படங்களில் படப்பிடிப்பு நடைபெற்ற போது அப்பகுதிக்கு வரும் வழிகளில் எல்லாம் பலத்த பாதுகாப்பை உருவாக்கியிருந்தார்களாம். அதோடு ‘கிக்’ படத்தின் டிரைலர் வெளியீட்டிற்கு மட்டுமே 100க்கும் மேற்பட்ட பாதுகாவலர்களை நிறுத்தியிருக்கிறார்கள்.
இது குறித்து படத்தின் இயக்குனரான சஜித் நாடியட்வாலா கூறுகையில், படப்பிடிப்பு நடைபெறும் போது எந்த தடையையும் நாங்கள் விரும்பவில்லை. பாதுகாப்பிற்காக நிறைய செலவு ஆகும் எனத் தெரியும். ஆனால், அதற்காக யோசிக்கவில்லை. டில்லியில் நாங்கள் படப்பிடிப்பு நடத்திய போது நடந்து செல்வதற்கே கடினமாக இருந்தது. இருந்தாலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் படப்பிடிப்பை நடத்தியது சுவாரசியமாக இருந்தது என்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி