புது டெல்லி:-காமன்வெல்த் போட்டி ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கிளாஸ்லோவ் நகரில் அடுத்த வாரம் தொடங்குகிறது. இந்த போட்டியில் இருந்து இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால் திடீரென விலகி உள்ளார்.
கொப்பளங்கள் ஏற்பட்டு அவதிப்பட்டதால் இந்த முடிவை அவர் எடுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், எனக்கு பயிற்சிக்கு போதுமான நேரம் இல்லை. மேலும் காயம் விஷயத்தில் அதிக ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி