சென்னை:-சைவம் படத்திற்கு பிறகு விஜய் ஒரு ரொமாண்டிக் காதல் கதையை படம் எடுக்கிறார். இதில் விக்ரம் பிரபு நடிப்பது உறுதியாகி இருக்கிறது. மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தின் லிஸ்பன் ஸ்டீபன் தயாரிக்கிறார். இதுபற்றி விஜய் கூறியிருப்பதாவது: சைவம் படத்திற்கு பிறகு எனக்கு பொறுப்பு கூடியிருக்கிறது.
சிறந்த படங்களை தருவதென முடிவு செய்திருக்கிறேன். இதுவரை ரொமாண்டிக் படம் இயக்கியதில்லை. முதன் முறையாக பரிசோதித்து பார்க்க இருக்கிறேன். விக்ரம் பிரபு, ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. காதலுக்குள் வரும் ஊடலும் கூடலும் தான் திரைக்கதை. ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி