இந்த வங்கியின் தலைமையகத்தை சீனாவில் அமைப்பது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டு, வங்கியின் முதல் தலைவராக இந்தியாவும், முதல் ஆளுநர்கள் குழுவில் ரஷியாவும் இடம் பெறுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.பிரிக்ஸ் வங்கிக்கான முதல் மூலதன தொகையாக சீனா 41 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், இந்தியா, ரஷியா, பிரேசில் ஆகிய நாடுகள் தலா 18 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், தென் ஆப்பிரிக்கா 5 பில்லியன் அமெரிக்க டாலர்களையும் வழங்க முன் வந்துள்ளது.
இன்னும் 2 ஆண்டுகளுக்குள் செயல்பட தொடங்கும் இந்த வங்கி இந்த மூலதன தொகையையினை கொண்டு பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்குள் ஏற்படும் திடீர் பொருளாதார நெருக்கடி காலத்தில் நிதி உதவிகளை செய்யும்.இந்த வங்கியின் முதன்முறை தலைவராக பொறுப்பேற்கும் இந்தியா 6 ஆண்டுகளுக்கும், அந்த பதவிக்காலம் முடிந்த பின்னர் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பிரேசிலும், பின்னர் ஐந்து ஆண்டுகளுக்கு ரஷியாவும் பிரிக்ஸ் வங்கியின் தலைமை பொறுப்பை வகிப்பது என்று பிரிக்ஸ் உறுப்பினர்களாக உள்ள 5 நாட்டு தலைவர்களுக்குள் இன்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி