இந்தி வசனங்களுக்கான அர்த்தத்தை தனுஷுக்கு சொல்லிக் கொடுத்து அவற்றை எந்த தொனியில் பேச வேண்டும் என்பது வரை அமிதாப் சொல்லிக் கொடுக்கிறாராம்.’ராஞ்சனா’ படத்தில் தனுஷ் ஒரு தென்னிந்தியராக நடித்ததால் இந்தி உச்சரிப்பு சரியாக இல்லையென்றாலும் படத்திற்கு பொருத்தமாக இருந்தது. ஆனால், இந்தப் படத்தில் உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டிய சூழ்நிலை, அதற்கேற்ற விதத்தில் தனுஷ் இந்தியை சரியாகப் பேச முயற்சி எடுத்து வருகிறாராம்.படத்தில் அமிதாப், தனுஷ் இருவரின் நடிப்பையும் பார்ப்பது பெருமையாக உள்ளது என்கிறார் இயக்குனர் பால்கி.
இருவரும் ஏதோ பல வருடங்கள் ஒன்றாகப் பழகியவர்களைப் போல இணக்கமாக நடித்து வருகிறார்கள். அமிதாப்புடன் தனுஷ் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார் என்று சொல்லவே முடியாது. அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் ஒவ்வொரு காட்சியும் அற்புதமானது,என்கிறார்.படப்பிடிப்பில் ஏசி போன்ற எந்த வசதிகளும் வேண்டும் என்றெல்லாம் கூட அமிதாப் கேட்கவில்லையாம். கோடை காலத்திலும் அது போன்ற வசதிகள் இல்லாமல் அமிதாப் நடித்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. படத்தில் அமிதாப் காட்டும் ஈடுபாடு படப்பிடிப்புக் குழுவினர் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சில வெளிநாடுகளிலும் நடைபெற உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி