அந்த வகையில், சென்னையில் நடந்த மணல் நகரம் படத்தின் ஆடியோ விழாவுக்கு வந்திருந்த ஒரு தலை ராகம் பட நாயகி ரூபாவும், டி.ராஜேந்தரின் கொள்கையைப்பற்றி தெரியாமல் அவர் மேடை ஏறியதும் அவரைப்பார்த்து நட்புக்கரம் நீட்டினார். ஆனால், அவரோ பதிலுக்கு கை கொடுக்காமல், கையெடுத்து கும்பிட்டு ரூபாவுக்கு வணக்கம் செய்தார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத ரூபா, நீட்டிய கையை திருப்பிக்கொண்டார். அதையடுத்து, ஒரு தலை ராகம் படத்தில் அத்தனை அழகான பாடல்களை வைத்து விட்டு, எனக்கு மட்டும் ஒரு பாடல்கூட தரவில்லை என்று டி.ஆரிடம் அவர் குறைபட்டுக்கொண்டார். அதற்கு அவரோ, உனக்கு பாடல் இல்லையென்றாலும், உன் கண்கள் பேசியது, பாடியது, நடித்தது எல்லாம் செய்ததே அப்புறமென்ன என்று தனது பேச்சு சாதுர்யத்தால் ரூபாவுக்கு பதில் கொடுத்து அவரது வாயை அடைத்தார் டிஆர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி