புதுடெல்லி:-வரி ஏய்ப்பு செய்து, கணக்கில் காட்டாமல் உள்ள சட்ட விரோதப்பணம் கறுப்பு பணம் ஆகும். 2013-14 நிதி ஆண்டில், வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் நடத்திய தேடுதல் வேட்டைகளில் ரூ.10 ஆயிரத்து 791 கோடியே 63 லட்சம் கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று பல்வேறு தனி நபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில் நடத்திய ஆய்வுகளில் கணக்கில் காட்டப்படாத சட்ட விரோதப்பணம் ரூ.90 ஆயிரத்து 390 கோடியே 71 லட்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஒரே நிதி ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் ரூ.1 லட்சத்து ஓராயிரத்து 182 கோடி ஆகும். இதே நிதி ஆண்டில், நகைகள், நிலைத்த வைப்புகள், ரொக்கம் ரூ.807 கோடி அளவுக்கு கைப்பற்றப்பட்டுள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி