சென்னை:-கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான படம் அரிமா நம்பி. பொதுவாக எந்தவொரு படத்தைத் தயாரித்தாலும் அதற்கு பிரம்மாண்டமாக விளம்பரம் செய்வார் கலைப்புலி தாணு. பணத்தை தண்ணீராக செலவு செய்து அவர் செய்கிற விளம்பரங்கள் மக்களை திரும்பிப்பார்க்க வைப்பது மட்டுமல்ல, தியேட்டருக்கும் அழைத்து வந்துவிடும். தற்போது அவர் வெளியிட்டுள்ள அரிமா நம்பி படத்துக்கும் விளம்பரத்துக்காகவே பல கோடிகளை ஒதுக்கி உள்ளார் தாணு.
விக்ரம் பிரபு நடித்த முந்தைய படமான இவன் வேற மாதிரி படம் பெரிய வெற்றி பெறவில்லை. ஆனாலும் தாணு மீதும், அவர் செய்யும் பப்ளிசிட்டி மீதும் நம்பிக்கை வைத்து அரிமா நம்பி படத்தை பெரிய விலை கொடுத்து வாங்கி உள்ளனர் விநியோகஸ்தர்கள். தியேட்டர்காரர்களும் பெருந்தொகையை அட்வான்ஸாகக் கொடுத்துள்ளனர்.ஆனால் முதல் இரண்டு இரண்டு நாட்கள் மட்டுமே தியேட்டர் ஹவுஸ்புல். அதன் பிறகு கூட்டம் குறைந்துவிட்டதாம். படத்தை வாங்கியவர்களுக்கு நஷ்டம் வருவதை தவிர்க்க முடியாது என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி