லண்டன்:-பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனசோர் இனத்தில் பல வகைகள் உண்டு என்று தொல்லியல் மற்றும் உயிரியல் ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.தற்போது, முன்னங்கால் மற்றும் பின்னங்கால்களில் சிறகுகள் முளைத்த பன்னிரண்டரை கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட, பறக்கும் சக்தி படைத்திருந்த அரிய வகை டைனசோர் இனத்தின் படிமத்தை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
இதன் உடலில் அமைந்திருந்த வால் பகுதியை பார்த்து வியந்த அவர்கள், இந்த அரிய வகை டைனசோர்கள் வேகமாக பறந்து வரும் வேளையில் பத்திரமாக தரையிறங்குவதற்கு வசதியாக இந்த வால் ‘பாரசூட்’ போல் பயன்பட்டிருக்கக் கூடும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி