வாஷிங்டன்:-பூமியை போன்று வேற்று கிரகங்களிலும் மனிதர்கள் உள்ளனர். அவர்கள் அவ்வப்போது பறக்கும் தட்டுகளில் பூமிக்கு வருகிறார்கள் என கதை போன்று தகவல்கள் வெளியாகின்றன. இது குறித்து பல ஹாலிவுட் சினிமா படங்களும் வெளியாகி வெற்றி பெற்றுள்ளன.இந்நிலையில், வேற்று கிரகங்களிலும் மக்கள் வாழ்கின்றனரா என்பது குறித்து அமெரிக்காவின் ‘நாசா’ மையம் ஆய்வு மேற்கொண்டுள்ளது.
நாசாவும் அதன் பங்கு நிறுவனங்களின் நிபுணர்கள் இணைந்து விண்வெளியில் ஆய்வு மேற்கொள்ள ‘ரோடு– மேப்’ அமைந்துள்ளனர். அதன் வழியின் சக்தி வாய்ந்த அதிநவீன டெலஸ் கோப்புகளை நிறுவியுள்ளனர்.அதன் மூலம் இன்னும் 20 ஆண்டுகளில் வேற்று கிரக மனிதர்கள் உள்ளனரா என்பதை கண்டுபிடிக்க முடியும். இந்த தகவலை பால்டிமோரில் உள்ள விண்வெளி டெலஸ்கோப் அறிவியல் நிறுவனத்தின் இயக்குனர் மாட் மவுன்டெய்ன் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி