கோலாலம்பூர்:-தெற்குஆசியாவில் பொருளாதாரத்தில் முன்னேறிய மலேசியாவில், அண்டை நாடுகளான இந்தோனேஷியா மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் சட்டவிரோதமாக தங்கி உள்ளனர். இவர்கள் அங்குள்ள எண்ணெய் பனை தோட்டங்களில் வேலை பார்த்து வருகிறார்கள். இவ்வாறு பணிபுரிந்து வரும் இந்தோனேஷிய தொழிலாளர்களில் 80 பேரை ஏற்றிக்கொண்டு இந்தோனேஷியா நோக்கி படகு ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது.
மலேசியாவின் தெற்கு கடலோரப் பகுதியில் உள்ள ஜோஹார் மாநிலம் தஞ்சங் பியாய் பகுதியில் அந்த படகு சென்றபோது மூழ்கி விபத்தில் சிக்கியது.ரோந்து படகு மீது தொழிலாளர்கள் வந்த படகு பயங்கரமாக மோதியதில் 2 பேர் நீரில் மூழ்கினர். 17 பேரை காணவில்லை. கடலில் மூழ்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி