செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் ஸ்டூடண்டாக நடிக்கும் அஜித்?…

மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் ஸ்டூடண்டாக நடிக்கும் அஜித்?…

மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் ஸ்டூடண்டாக நடிக்கும் அஜித்?… post thumbnail image
சென்னை:-கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் அனுஷ்கா, திரிஷாவும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.ஹாரிஸ் ஜயராஜ் இப்படத்துக்கு இசையமைக்கிறார். தன்சிகா, அருண் விஜய் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

கதைப்படி ஒரு அஜித் நாற்பது வயது மதிக்கத்தக்க போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம். இன்னொரு அஜித் காலேஜ் ஸ்டூடண்டாக நடிக்கிறாராம்.’மின்னலே’ படத்தில் ஆரம்பித்து, ‘நீதானே என் பொன்வசந்தம்’ படம் வரை காலேஜ் ஸ்டூடண்ட் என்றாலே ஹீரோவை மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் ஸ்டூடண்டாகவே கௌதம் மேனன் காட்டுவார்.

கௌதம் மேனனின் புதிய படத்தில் அஜித் ஒரு காப்பு அணிந்திருக்கிறார். அது ஸ்பேனரையே வளைத்து காப்பாக மாற்றி இருப்பதுபோல தெரிகிறது. இதனால் அஜித்தும் மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் ஸ்டூடண்டாக நடித்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி