இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டி பிரசிடென்சி கிளப் மைதானத்தில் வருகிற 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. 19 மற்றும் 20ம் தேதிகளில் தகுதி சுற்றுகள் நடக்கிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து, அமெரிக்கா, மலேசியா மற்றும் இந்தியாவை சேர்ந்த 143 வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.1.50 லட்சம் பரிசாக வழங்கப்படுகிறது. இந்த தகவலை பிரசிடென்சி கிளப் செயலாளர் விஜி ஜோசப் சென்னையில் நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது அகில இந்திய டென்னிஸ் சங்க துணைத்தலைவர் கார்த்தி ப.சிதம்பரம், தமிழ்நாடு டென்னிஸ் சங்க செயலாளர் சி.என்.பி.ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி