இதய செல்களின் அபரிமிதமான வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக் குறைவு போன்றவையே இதயத்தில் பல்வேறு பாதிப்புகளை உருவாக்குகின்றன. இதனால் இதயத் துடிப்புகள் குறைந்து உடல்செயல்கள் மந்தமாகிறது. திடீர் மரணங்களும் நேர்கிறது. ஸ்டெம்செல் கொண்டு உருவாக்கப்படும் சிறிய செயற்கை இதயங்கள், இயற்கை இதயத்துடன் இணைந்து செயலாற்றி உடல் இயக்கத்திற்கு துணை புரிகிறது. எதிர்காலத்தில் இதய சிகிச்சையில் இந்த செயற்கை இதயம் முக்கியத்துவம் பெறும் என்று கூறுகிறார் ஆராய்ச்சிக் குழுவைச் சேர்ந்த பேராசிரியர் நிகோலாய்.
இதேபோல ஸ்டெம் செல் மூலம் கார்னியாவை (விழி வெண் படலம்) உருவாக்கி இருக்கிறார்கள் மாசூசெட்ஸ் ஆராய்ச்சியாளர்கள். அவர்கள் கண்ணின் கருவிழி மற்றும் வெண் கோளம் சேரும் இடத்தில் இருந்து ஒரு வகை அபூர்வ செல்களை பிரித்து எடுத்தனர். அதற்கு AB-CB5 என்று பெயரிட்டு உள்ளனர். இந்த செல்களை கண்களின் விழி பெண் படலமாக வளர்க்க முடியும். ஆய்வகத்தில் இந்த செல்களை கார்னியா திசுக்களாக வளர்த்து வெற்றி கண்டுள்ளனர். அவற்றை எலிகளுக்கும் பொருத்தி சாதித்து உள்ளனர்.
ஒளி ஊடுருவக் கூடியது இந்த செல்கள். இவற்றில் பாசிடிவ் மற்றும் நெகடிவ் என இரு வகை செல்கள் உள்ளன பாசிடிவ் செல்களையே கார்னியா திசுவாக வளர வைக்கவும், நீண்ட காலம் பராமரித்து பாதுகாக்கவும் முடியும். ஆனால் நெகடிவ் செல்கள் கார்னியா திசுவாக வளர்வதில்லையாம். எலிகளுக்கு செயற்கை கார்னியா வெற்றிகரமாக பொருத்தப்பட்டு விட்டதால் அடுத்ததாக மனிதர்களில் சோதித்து பார்க்க முடிவு செய்து உள்ளனர். அதிலும் வெற்றி கிடைத்தால் கண் பார்வை இல்லாதவர்கள் மற்றும் விபத்தில் கண் இழந்தவர்கள் அனைவரும் மீண்டும் பார்வை பெற வழி கிடைக்கும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி