இந்த புகாரில் ஒலிவா தன்னிடமிருந்து கைக்கடிகாரங்கள், வைர காதணிகள் போன்றவற்றை திருடிச் சென்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.இதனைத் தொடர்ந்து கடந்த 9ம் தேதியன்று ஒலிவா மீது கைது வாரன்ட் ஒன்றை துபாய் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்படுவதற்காக அவரை துபாய்க்கு திரும்ப கொண்டுவர வேண்டுமென்று இண்டர்போல் உதவியை நாடியுள்ளதாக அரசு வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார்.
மரடோனாவைப் போலவே கால்பந்து வீராங்கனையான ஒலிவா தற்போது அர்ஜென்டினாவில் தான் உள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் அவர் மரடோனா தன்னைத் தாக்கியதாகக் கூறுகின்றார்.ஆனால் இருவரும் கடந்த மாதம் பிரேசிலின் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் ஒன்றாகக் காணப்பட்டதாகவும், அவர்களுக்கிடையே நடைபெற்ற சமரச முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி