சென்னை:-1991ல் மாங்கல்யம் தந்துனானே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அகத்தியன். அதையடுத்து மதுமதி, வான்மதி ஆகிய படங்களை இயக்கியவருக்கு காதல் கோட்டை படம் தேசிய விருது பெற்றுக்கொடுத்தது. அப்படத்தில் அஜீத்-தேவயானி ஜோடியாக நடித்திருநதனர். தொடர்ந்து விடுகதை, கோகுலத்தில் சீதை, காதல் கவிதை போன்ற படங்களும் அவர் இயக்கத்தில் வெளியாகின.
பின்னர் அவர் இயக்கிய காதல் சாம்ராஜ்ஜியம் என்ற படம் இன்னமும் திரைக்கு வரவில்லை. அதையடுத்து அகத்தியனின் சினிமா பயணத்தில் தொய்வு நிலை ஏற்பட்டது. இருப்பினும் பலவித போராட்டங்களுக்கிடையே ராமகிருஷ்ணா, செல்வம் உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். அந்த படங்கள் வெற்றி பெறாததால், பின்னர் பட வாய்ப்பு இல்லாமல் இருந்தார்.
இந்நிலையில், 6 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது ஒரு படத்தை இயக்கயிருக்கிறார் அகத்தியன். இந்த படத்தை டைரக்டர் பாரதிராஜா தயாரிக்கிறாராம். விரைவில் படப்பிடிப்பு தொடங்கயிருப்பதால் தற்போது கதை விவாதம் உள்ளிட்ட முதல்கட்ட வேலைகளில் தீவிரமாக நடந்து வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி