நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்திற்குப் பிறகு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, மாணவியை ஓடும் பஸ்சில் கொடூரமாக கற்பழித்து கொலை செய்த நபர்கள் 4 பேருக்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது. இதனை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. மற்றொரு குற்றவாளி சிறுவன் என்பதால் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டான்.
இந்நிலையில் தூக்குத் தண்டனையை எதிர்த்து குற்றவாளிகளான அக்சய் தாக்கூர், வினய் சர்மா ஆகியோர் மேல்முறையீடு செய்திருந்தனர். அவர்களின் மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், அவர்களுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி