செய்திகள்,திரையுலகம் காதல் திருமணம் செய்ய விரும்பும் நடிகை தமன்னா!…

காதல் திருமணம் செய்ய விரும்பும் நடிகை தமன்னா!…

காதல் திருமணம் செய்ய விரும்பும் நடிகை தமன்னா!… post thumbnail image
சென்னை:-இன்றைய ஹீரோயின்கள் பலரும் மனதுக்குப் பிடித்தவரைக் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்வார்கள். தற்போது அந்த வரிசையில் நடிகை தமன்னாவும் இடம் பெற்றுள்ளார்.என்னைக்காவது ஒரு நாள் நானும் திருமணம் செய்து கொள்வேன். ஆனால், அது கண்டிப்பா காதல் கல்யாணமாதான் இருக்கும். மனசுக்குப் பிடிச்ச ஒருத்தரைக் காதலிச்சி, அப்பா, அம்மா சம்மதத்தோடத்தான் அந்த திருமணம் நடக்கும்.

அவங்க சம்மதம் இல்லாம நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். ஆனால், இந்த காதல், கல்யாணம் இதுக்கெல்லாம் இன்னும் ரொம்ப நாளாகும், என்று சொல்லியிருக்கிறார்.தமிழில் எந்த புதுப்படத்திலும் நடிக்கவில்லையென்றாலும், ஹிந்தியில் அக்ஷய் குமார் ஜோடியாக தமன்னா நடித்துள்ள ‘இட்ஸ் என்டர்டெயின்மென்ட்’ படம் அடுத்த மாதம் வெளிவர உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி