சென்னை:-‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்தவர் நடிகை ரெஜினா. அதன் பிறகு தமிழில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காததால் அப்படியே ஆந்திரா பக்கம் தாவி விட்டார். அங்கு செம கிளாமராக நடிக்க ஆரம்பித்து தொடர்ந்து பட வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். அதோடு சமீபத்தில் அவர் நாயகியாக நடித்து வெளிவந்த ‘ரா ரா கிருஷ்ணய்யா’ படத்தில் நாயகன் சந்தீப்புடன் முத்தக் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த முத்தக் காட்சிக்காகவும் இருவருக்குமிடையேயான ‘லக் கெமிஸ்ட்ரி’யும் ஆந்திர இளைஞர்களைக் கவர்ந்து விட்டதாம்.கிளாமராகவும் நடிக்கத் தயார், முத்தக் காட்சியிலும் நடிக்கத் தயார் என திரையுலகத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு ரெஜினா நடந்து கொள்வதால் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்து தற்போது நான்கு தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் ரெஜினாவுக்கும், சந்தீப்புக்கும் திரையில் இருந்த காதல் கெமிஸ்ட்ரி இப்போது நிஜ வாழ்விலும் பற்றிக் கொண்டதாம். இருவரும் தீவிரமாகக் காதலித்து வருகிறார்கள் என டோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி