செய்திகள் 72 வயது மனைவியை தவிக்கவிட்டு காதலியுடன் ஓடிய 80 வயது முதியவர்!…

72 வயது மனைவியை தவிக்கவிட்டு காதலியுடன் ஓடிய 80 வயது முதியவர்!…

72 வயது மனைவியை தவிக்கவிட்டு காதலியுடன் ஓடிய 80 வயது முதியவர்!… post thumbnail image
திருவனந்தபுரம்:-கேரள மாநிலம் காசர் கோடு அருகே உள்ள காஞ்சாங்கோடு பள்ளிகரை பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 80). இவரது மனைவி சந்திராவதி (72). இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி 50 ஆண்டுகள் ஆகிறது.இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள். அவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராதாகிருஷ்ணன் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திராவதி வயதான காலத்தில் தனியாக வெளியே சென்ற தனது கணவர் எங்காவது விழுந்து விட்டாரோ என்று பதறிபோய் அவரை பல இடங்களிலும் தேடினார்.
ஆனால் கணவர் பற்றி அவருக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் சந்திராவதி மனம் உடைந்து காணப்பட்டார். இந்நிலையில் சந்திராவதிக்கு அதிர்ச்சி அளிக்கும் ஒரு தகவல் கிடைத்தது.80 வயதான ராதாகிருஷ்ணன் ஒரு பெண்ணுடன் வேறு ஒரு வீட்டில் தனியாக வசித்து வருவதாகவும், அந்த பெண்ணுக்கும் ராதாகிருஷ்ணனுக்கும் பல ஆண்டுகளாக பழக்கம் இருந்து கள்ளத்தொடர்பு ஏற்பட்டதும் சந்திராவதிக்கு தெரியவந்தது.உடனே அவர் ஆத்திரத்துடன் அந்த வீட்டை தேடி கண்டுபிடித்து அங்கு சென்றார். அங்கு கள்ளக் காதலியுடன் வாழ்க்கை நடத்தி வந்த ராதாகிருஷ்ணன் மனைவி தன்னை தேடி வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

சந்திராவதி தன்னுடன் குடும்பம் நடத்த ராதாகிருஷ்ணனை அழைத்தார். ஆனாலும் மனைவியுடன் குடும்பம் நடத்த வர மறுத்த அவர் கள்ளக்காதலியுடன் தான் வாழ்வேன் என்று உறுதியாக கூறிவிட்டார்.இதனால் மனவேதனை அடைந்த சந்திராவதி கணவரை திட்டி தீர்த்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். 80 வயதில் கள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்துவதுடன் தன்னையும் ஆதரவற்று தவிக்க விட்ட கணவருக்கு தண்டனை பெற்று தரவேண்டும் என்று தீர்மானித்த சந்திராவதி கணவருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.அதில், தனக்கு மாதம் தோறும் ரூ.5 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க கணவர் ராதாகிருஷ்ணனுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தனக்கு உரிமை உள்ள நிலத்தை கணவரிடம் இருந்து மீட்டுதர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இதுதொடர்பாக ராதாகிருஷ்ணனுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டு உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி