அதேசமயம், விஜய் சேதுபதியுடன் நடித்த இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் வெற்றி பெற்றது. ஆக கோலிவுட்டில் தங்கி விட்டார் ஸ்வாதி. அமளிதுமளி, கார்த்திகேயா ஆகிய படங்களையும் கைப்பற்றி நடித்து வரும் அவருக்கு அறிந்தும் அறியாமலும் படத்தில் நடித்த நவ்தீப் மீண்டும் தமிழில் நடிக்கும் லவ் பண்ணுங்க லைப் நல்லாருக்கும் என்ற படத்திலும் நடிக்க சான்ஸ் கிடைத்துள்ளது.
அதனால் தமிழில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பலமாக காலூன்றி விட வேண்டும் என்று முண்டியடித்து வருகிறார்.
இந்நிலையில், லவ் பண்ணுங்க லைப் நல்லாயிருக்கும் படத்தைப்பற்றி அவர் கூறும்போது, இதற்கு முன்பு எத்தனையோ படங்களில் காதல் கதைகளில் நடித்திருந்தாலும். இதில் எனக்கு வித்தியாசமான காதலி வேடம். காதலிப்பதும், காதலை வெளிப்படுத்துவதும் ரொம்ப புதுமையாக இருக்கும்.அதனால், இந்த படத்தில் நடித்தது எனக்கு புதிய அனுபவமாக இருந்ததோடு, காதலிக்க வேண்டும் என்ற உணர்வை தூண்டுவது போல் இருந்தது என்று சொல்லும் ஸ்வாதி, இதே உணர்வு படம் பார்க்கிற ரசிகர்கள் அனைவருக்குமே ஏற்படும் என்று மனம் திறந்து பேசி வருகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி