செய்திகள்,திரையுலகம் தம்பியை விட அண்ணனுடன் நடிக்க விரும்பும் நடிகை மியா!…

தம்பியை விட அண்ணனுடன் நடிக்க விரும்பும் நடிகை மியா!…

தம்பியை விட அண்ணனுடன் நடிக்க விரும்பும் நடிகை மியா!… post thumbnail image
சென்னை:-ஆர்யாவின் தம்பி சத்யா நடிக்கும் படம் அமரகாவியம். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் மியா ஜார்ஜ். கேரளாவில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது கேரியரைத் தொடங்கியவர். ஒரு சுமார் பேமிலி, டாக்டர் லவ், ஏ அதுல காலத்து போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர் சாட்டயேஸ் என்ற படத்தில் ஹீரோயினான் ஆனார்.

8 மலையாள படங்களில் நடித்துவிட்டு 9வது படமாக அமரகாவியம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். தம்பி சத்யாவுடன் நடித்தாலும அண்ணன் ஆர்யாவுடன் நடிக்கத்தான் அதிக விருப்பம் என்கிறார்.அவர் கூறியிருப்பதாவது: பள்ளியில் பாடம் படிக்கும்போதே நடனத்தையும் சேர்த்தே கற்றேன். குச்சிபுடி, மோகினி ஆட்டம், பரதம், கதகளி என்று நடனத்தில் எதையும் விட்டு வைக்கவில்லை. பள்ளியில் என்னை எல்லோரும் சகலகலாவல்லி என்றுதான் சொல்வார்கள். நடனம், மாடலிங் அனுபவம் இருந்தாலும் நடிப்பு பயிற்சி எடுக்கவில்லை. சினிமாவில் நடித்துதான் நடிப்பு கற்றேன்.

ஆர்யாவுடன் நடிக்கத்தான் மிகவும் ஆசையுடன் இருந்தேன். என்றாலும் ஆர்யா தயாரிப்பில் அவரது தம்பியுடன் நடிப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஆர்யாவுடன் நடிக்கும் அளவிற்கு வளர்ந்துவிடுவேன் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. எனது பேச்சில் தற்போது கொஞ்சம் மலையாள வாசனை இருக்கிறது. விரைவிலேயே நன்றாக தமிழ்பேச கற்று என் படத்துக்கு நானே டப்பிங் பேசுவேன் என்கிறார் மியா ஜார்ஜ்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி