313 பயணிகளுடன் அமெரிக்காவின் நியுஜெர்சி மாகாணத்தில் இருந்து போயிங் 777 வகையை சேர்ந்த ஏர் இந்தியா விமானம் மும்பைக்கு புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட அரை மணி நேரத்தில் அதன் விமானத்தில் இடது பக்கத்தில் தீ பிழம்புகள் வந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து விமானம் மீண்டும் நியூஜெர்சி விமான நிலையத்திற்கு திரும்பி சென்று தரையிறங்கியது.
விமானம் இறங்கும் இடத்திற்கு ஆம்புலண்ஸ் வருமாறு விமானி வேண்டுகோள் விடுத்தார். எனினும் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பயணிகளை இந்தியா கொண்டு செல்ல மற்று விமானம் தயாராகிவவருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.முதலில் இந்த விமானத்தில் பறவை மோதியதால் தீ பிடித்து இருக்கலாம் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி